search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்தா சீனிவாசன்"

    பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் மரணமடைந்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.

    அவர் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். அவரது மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Tamilnews
    பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குனருமான முக்தா சீனிவாசன் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #MukthaSrivasan #RIPMukthaSrivasan

    சென்னை:

    முக்தா சீனிவாசன் (88), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 100-வது படமான ‘சூரியகாந்தி’, ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார். இவர் இயக்குனர் மட்டுமன்றி சிறந்த எழுத்தாளரும் ஆவார்.

    இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்றிரவு காலமானார். அவரது மனைவி பெயர் பிரேமா. அவருக்கு முக்தா சுந்தர், முக்தா ரவி என்ற மகன்களும், மாயா என்ற மகளும் உள்ளனர். 

    அவரது உடல் தி.நகரில், வைத்திய ராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முக்தா சீனிவாசன் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் பிரபலாமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #MukthaSrivasan #RIPMukthaSrivasan
    ×